பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய மத்திய பாரதிய ஜனதா மற்றும் அதற்கு துணைபோகும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனே விலை குறைப்பு செய்யவலியுறுத்தியும், கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கையை மத்திய பா.ஜ.க.அரசு உடனடியாக மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.



அதன்படி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சேனாதிபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்த்திய பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்தும், உடனே விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மத்திய அரசுடன் மாநில அரசு சேர்ந்துகொண்டு மக்களது அடிப்படைத் தேவைகளை உணராமல் கண்டும் காணாமல் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.



மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ் விலைஉயர்வை உடனடியாக மத்திய-மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரம், பகுதி, ஒன்றியம், வட்டம், பேரூர் பொறுப்பாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மூத்த முன்னோடிகள், அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி எங்கு பார்த்தாலும் தி.மு.க. கட்சிக் கொடிகள் தென்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தப்பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...