திமுகவிடமிருந்து தூது வந்தது ஆனால் அது செல்லாது, தலைமையிடமிருந்து வரவேண்டும் - கமல் ஹாசன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் வைத்து இன்று நடைபெற்றது.



சென்னை: நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் வைத்து இன்று நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘இன்று பசுமாட்டுக்கு கொடுக்கும் மரியாதை கூட மனிதனுக்கு அதுவும் தமிழனுக்கு கிடைப்பதில்லை. பிரதமரை சந்திக்க நேரம் பல முறை கேட்டும் கிடைக்கவில்லை. கட்சியில் சேர்ந்து காவி துண்டு போட்டுக் கொள்ள அல்ல. மய்யம் என்பது கொள்கைப்பற்று என்று கூறிக்கொண்டு மக்களுக்கு நடக்கவிருக்கும் நல்லதை தடுக்கக் கூடாது. விட்டுக் கொடுத்தல் தானே அரசியல்.

நான் ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் உண்டு. இப்போது வயது 60 எனக்கு. சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் நான். அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி தான் பிக் பாஸ்.

தி.மு.க, அ.தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல பணி செய்து விட்டு மரியாதை இல்லாமல் உள்ளனர். அவர்களை மக்கள் நீதி மய்யத்தில் சேர அறைகூவல் விடுக்கிறேன். எம்.ஜி.ஆர் பத்து முறையாவது என் நெத்தியில் முத்தம் கொடுத்திருக்கிறார். நாம் ஆட்சி அமைந்தால் மத நல்லிணக்கம் தானாக நடக்கும். ஆனால் இன்றைய அரசியல் அப்படி இல்லை.

ஆட்சியில் இருக்கும்போதே முதல்வர் கைதாகும் வரலாற்றை ஏற்படுத்தியுள்ள கட்சி அ.தி.மு.க. இரட்டை இலை என்று எம்.ஜி.ஆர் காட்டியது இரண்டு பேருக்கு இலை போட்டு சாப்பிட என நினைத்துக் கொண்டார்கள் போலும். நான் சொல்வதையெல்லாம் முதல்வர் செய்கிறார் என மு.க.ஸ்டாலின் மகிழ்கிறார். சரி, டாஸ்மாக் மூட வேண்டும் என கூறுங்கள்.

கூவத்தூரில் இவர்தான் அவருக்கு ஊத்தி கொடுத்தார். அவர் தான் இவருக்கு ஊத்தி கொடுத்தார் என சர்ச்சை வந்தது. ஆனால், ஊருக்கே ஊத்திக் கொடுத்தவர்கள் இவர்கள். தி.மு.க, அ.தி.மு.கவும் ஒரே விசயத்தை தான் செய்கிறார்கள். இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. செய்வீர்களா என கேட்கவில்லை.

செஞ்சுருங்க என கூறுகிறேன். நமக்கு நேரம் இல்லை. உங்களுக்கு வர வேண்டிய 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மூன்று ஆண்டுகள் முன் கூறினார்கள். பரவாயில்லை என்று அரசியலுக்கு வந்தேன். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். மார்ச் 7ம் தேதி நடைபெறும் மாநாடு தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ரஜினிகாந்த்துடன் அரசியல் பேசவில்லை. அவர் வரவில்லை என்று கூறியவுடன் உடன் பணியாற்ற எப்படி அழைக்க முடியும்? சரியாக இருக்குமா? மூன்றாவது அணி மலரும் என்று தோன்றுகிறது. தி.மு.கவிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தூது விடுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...