தேக்கம்பட்டி முகாமில் தாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை நலம்!

கோவை: தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்ச்சி முகாமில் பாகன்களால் தாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது.



கோவை: தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்ச்சி முகாமில் பாகன்களால் தாக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

தேக்கம்பட்டியில் உள்ள யானை புத்துணர்ச்சி முகாமுக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெண் யானை (ஜெயமால்யாதா, வயது 18) பாகன்களால் தாக்கப்பட்டதாக செய்தி கிடைத்ததும், அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வினில்குமார் (வயது 46) சிவபிரசாத் (வயது 32) ஆகிய இரண்டு இரண்டு பாகன்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு வளர்ப்பு யானை விதிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த யானையை நிர்வகிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகள் அறநிலையத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சேந்தூர் கோயில் பெண் யானையுடன் வந்த உதவியாளர் சுப்பிரமணியம் என்பவர் இப்போது யானையைக் கண்காணித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கம்பட்டி முகாமில் இந்த யானையைப் பார்த்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலுக்குள்ளான யானையை ஆய்வு செய்ய கோயம்புத்தூர் வன கால்நடை அலுவலர் வருகை தந்தார். அவர் முகாமுக்கு சென்று யானையை முழுமையாகப் பரிசோதித்ததில் யானைக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...