கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் வங்கியில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ரூபாய் 2 லட்சம் செலுத்துவதற்காக வந்திருந்தார். அவர் வங்கி ஊழியரிடம் இரண்டு லட்சம் ரூபாயை செலுத்துவதற்காக கொடுத்தார். அப்போது சந்தேகமடைந்த வங்கி ஊழியர் அந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதித்துப் பார்த்ததில் அதில் 14 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து வங்கி மேலாளர் செல்வக்குமார் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் 14 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன்பேரில் தனியார் நிறுவன ஊழியரான ஆவலப்பம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.