கோவை அருகே அவுட்டுக்காய் வைத்து பன்றியைக் கொன்ற 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை

கோவை: கோவை அருகே அவுட் காய் வைத்து பன்றியைக் கொன்ற 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை



கோவை: கோவை அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடுவதற்காக அவுட்டுக்காயை பதித்து வைத்து, பன்றிகளை கொன்ற இரண்டு நபர்கள் மீது வனத்துறையினர், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு கிடைத்த தகவலின்படி, வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் அடங்கிய குழு, பெத்திக்குட்டை சுற்றுக்கு உட்பட்ட அன்னூர் தாலுக்கா, அம்மாசெட்டி புதூர் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். 

அப்போது, ஜேம்ஸ் என்ற ராமசாமி (வயது 38), என்பவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, இறந்த காட்டுப்பன்றியை தீயில் சுட்டு இரண்டாக வெட்டி சமைப்பதற்கு சுத்தம் செய்த வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் (வயது 50) என்பவருடன் சேர்ந்து அவுட்டுக்காய் (நாட்டு வெடிகுண்டு) வைத்து காட்டுப் பன்றியை கொன்றது தெரியவந்தது. 

பின்பு, அவுட்டுக்காய் வைத்த இடமான பட்டக்காரன்புதூர் சுடுகாடு பகுதிக்கு சென்று சம்பவ இடத்தை சோதனை செய்ததில் வெடித்த அவுட்டுக்காயின் பாகங்கள் கிடைத்துள்ளது. இதன் மூலம், காட்டுப்பன்றியை அவுட்டுக்காய் வைத்து கொன்றது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, வனத்துறையினர் இறந்த பன்றியின் உடலை, சிறுமுகை வனச்சரக அலுவலகம் கொண்டு வரப்பட்டு, கோவை வனக் கால்நடை மருத்துவர், சுகுமார் தலைமையில், உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. உடற்கூர் ஆய்வில், அவுட்டுக்காய் வைத்து காட்டுப் பன்றியை கொன்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து,காவல் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தபட்ட இருவரும், அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

அன்னூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...