பப்ஜியில் பழகிய நபரால் ஏமாற்றப்பட்ட கேரளா பெண் அதிகாரி; கோவை போலீசாரிடம் புகார்..!

பப்ஜியில் பழகிய நபரால் ஏமாற்றப்பட்ட கேரளா பெண் அதிகாரி; கோவை போலீசாரிடம் புகார்..!



கோவை: பப்ஜி விளையாட்டு மூலமாக தனக்கு அறிமுகமான ஒரு ஆண், தன்னை கோவைக்கு வரும்படி சொல்லி தன்னுடன் நெருக்கமாக இருந்து விட்டு ஏமாற்றியதாக,கேரளாவை சேர்ந்த ஒரு பெண் வங்கி அதிகாரி கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த,வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

பப்ஜி என்ற பிரபல ஆன்லைன் கேம் உட்பட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து சென்ற ஆண்டு மத்திய அரசு அதிரடியாக அறிவித்து. இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் பப்ஜி கேமை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.தடைக்கு பின்னும், வேரு இணையதளத்தில் பணம் செலுத்தி, பப்ஜி விளையாட்டை சிலர் தற்போதும் விளையாடி வருகின்றனர்.இதே போல் விளையாடி, தன்னை வாழ்கையில் பெரும் துயரத்தை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான்

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 24, வயது பெண். அதே பகுதியில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். நான் பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். 

இந்த கேம் ஆன்லைனில் விளையாடுவதால் பலர் ஒன்று சேர்ந்து விளையாடலாம். அப்படி ஒருநாள் நான் விளையாடிய போது வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனக்கு கேரள மாநிலம் கொச்சி என்றும் தனது பெயரை ஹரிஷ் 25, என்றும் கூறினார். தொடர்ந்து நாங்கள் ரெண்டு பேரும் பப்ஜி கேம் விளையாடி வந்தோம். அப்போது, ஒருநாள் ஹரிஷ் என்னிடம் செல்போன் நம்பர் கேட்டார். நானும் கொடுத்தேன் தொடர்ந்து போன் செய்து பேசி வந்தோம். 

நாளடைவில், நாங்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாக மாறினோம். இந்த நிலையில் ஒருநாள் ஹரிஸ் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் கோவையில் நண்பர் ஒருவரை பார்க்க செல்வதாகவும், நீயும் என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். முதலில் மறுப்பு தெரிவித்த நான், அவரின் தொடர் வற்புறுத்தலால் வருவதாக கூறினேன். அதன்படி கடந்த வாரம் ரெண்டு பேரும் கேரளாவில் இருந்து பஸ் மூலம் கோவை காந்திபுரத்தில் வந்தோம். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து ஒரு நாள் தங்கினோம். 

அப்போது ஹிரீஸ் என்னிடம் ஆசை வார்த்தை கூறி என்னை கற்பழித்தார். பின்னர், ரெண்டு பேரும் கேரளாவுக்குச் சென்று விட்டோம். ஊருக்குச் சென்ற சில நாட்களில் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நான் சம்பவம் குறித்து கேரள மாநிலம் பல்லுருத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் சம்பவம் நடந்த இடம் கோவை என்பதால் அங்கு சென்று புகார் கொடுங்கள் என்றனர். அதனால் கோவை வந்து புகார் கொடுத்துள்ளேன், இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 

அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரியை ஏமாற்றிய பப்ஜி வாலிபரை, கோவையில் தேடி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...