தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில், யானையை கொடுமையாக தாக்கும் பாகன் மீது நடவடிக்கை..!

தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில், யானையை கொடுமையாக தாக்கும் பாகன் மீது நடவடிக்கை..!


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதில், தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் மடங்களில் இருந்து 28 யானைகள் புத்துணர்வு முகாமில் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன் கடுமையாக தாக்கும் வீடியோபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், அந்த யானையை ஒரு தடியை கொண்டு முதலில் ஒரு பாகன் கடுமையாக காலில் தாக்குகிறார், பின்னர் மற்றொரு பாகன்என்று, அந்த யானையை மாறி மாறி இருவரும் கடுமையாக தாக்கும், நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.



இந்த நிலையில், யானையை தாக்கிய பாகன் மற்றும் உதவி பாகனை பணியிடை நீக்கம் செய்ய இந்து அறநிலைத் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், நேற்று மாலை கால் சங்கிலியை கழட்டிய யானை, பாகனின்காலை மிதித்ததாக, கூறப்படுகிறது.

சங்கிலியை கழட்டிய அந்த யானை அங்கிருந்து வெளியேறி இருந்தால், மற்றவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்ற காரணத்தினால் யானையை எச்சரிக்கும், வகையில் தாக்கியதாக அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாக கூறப்படுகிறது.

யானைகளை கொடுமைப்படுத்துதல் குற்றம் என்ற சட்டப் பிரிவின் கீழ் வனத்துறையினர், இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...