திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்புகள் அதிகரிக்கும் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்புகள் அதிகரிக்கும் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி


பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி, பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இன்று மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பின்னர், செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியின்போது, திமுகவிடம் இருந்து தான் தமிழக பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை, என்றார்.

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிமானம் உள்ளது. கடந்ததிமுக ஆட்சியில், நில அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த கட்சி திமுக என்ற அதிருப்தி மக்களிடையே உள்ளது. திமுக என்றாலே மக்கள் பயந்து ஓடுகிறார்கள். குறிப்பாக சிறு மற்றும் பெரும் தொழிலதிபர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் அபகரித்து விடுவார்கள் என்றுஅச்சப்படுகிறார்கள், என்று குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக எடப்பாடியார் நல்லாட்சி வழங்கி வருகிறார். மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மு க ஸ்டாலின் குற்ற ஆராய்ச்சி நிபுணராகஎப்போதும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை சொல்லி வருவதால் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். முதல்வர் செயல்படுத்தும்நல்லதிட்டங்களை எல்லாம் அவர் சொல்லி தான் செய்கிறார் என்று முந்திரிக் கொட்டையாக சொல்வதைப் பார்த்து அவருக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதோ, என்று மக்கள் நினைக்கிறார்கள்.

இது போன்ற செயல்பாடுகளால், ஸ்டாலின் மீது மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள். இவர் சொல்லி நிறைவேற்ற வேண்டிய நிலையில் முதல்வர் இல்லை. எடப்பாடியார் யாருடையபதவியைப் பறித்துக் கொண்டுவரவில்லை. ஆனால், முக ஸ்டாலின் கருணாநிதி மகன் என்ற தகுதியில் தான் தமிழகத்தில் அரசியல் செய்கிறார். 2021 தேர்தலுக்கு பிறகு தொண்டர்கள் உழைப்பால் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றுதான் அவருடையவேலையாக இருக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...