கோவையில் நாளை தேசிய திறனாய்வு தேர்வு; 5 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்

கோவையில் நாளை தேசிய திறனாய்வு தேர்வு; 5 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்.


கோவை: கோவையில் 51 மையங்களில் நாளை நடக்கும் தேசிய திறனாய்வு தேர்வை 5 ஆயிரத்து 387 பேர் எழுதவுள்ளனர், என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடை நிற்றலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 8-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு, அரசு தேர்வுகள் துறை சார்பில், நாளை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்

 "கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவை மாவட்டத்தில் நாளை, பிப் 21 ஆம் தேதி, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் 51 மையங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 387 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்", என்று தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...