காங்கயத்தில் திமுக இரண்டு அணிகளாகச் செயல்படுகின்றனவா? கார்த்திகேய சிவசேனாபதி மறுப்பு!

கோவை: காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுக இரண்டு அணிகளாகச் செயல்படுவதாக வெளியான செய்திக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.


கோவை: காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் திமுக இரண்டு அணிகளாகச் செயல்படுவதாக வெளியான செய்திக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

வரும் சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி அமைய வேண்டும், மக்களுக்கு விடியல் தர வேண்டும் என்ற நோக்கில் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வியூகங்களின் வழியே மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைவர் அவர்கள் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்", "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற உத்திகளில் பெருவாரியான மக்களைச் சந்தித்து வருகிறார்.

மேலும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கழக மகளிரணி செயலாளர் கனிமொழி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் மக்களிடையே சென்று அதிமுகவின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய பத்திரிக்கை செய்தி ஒன்றில் காங்கயத்தில் திமுக இரண்டு அணியாகச் செயல்படுவதாகவும் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் போட்டி நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கயம் தொகுதியில் கழகத்தின் செயல்பாடுகளில் எவ்வித கோஷ்டி பூசலும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்தே கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்கும் வேட்பாளரை முழுமனதுடன் ஏற்று அவரை வெற்றி பெறச் செய்வது ஒன்றே கழக நிர்வாகிகளின் நோக்கமாக இருக்கிறது.

மேலும், தொகுதியில் நலத்திட்டப் பணிகள் அனைத்தும், அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் பணியாற்றி வருகிறோம்.

எனவே, காங்கயம் தொகுதியில் உட்கட்சி பிரச்சினை ஏதுமில்லாத சூழலில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற அவதூறு செய்திகளை சில பத்திரிக்கைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

திமுக பிரச்சாரத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பும் ஆதரவும் ஆளுங்கட்சியைக் கலக்கமடையச் செய்துள்ளது. கழகத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாத அதிமுக அரசால் பரப்பப்படும் விஷம பிரச்சாரங்களில் ஒன்றாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்.

ஆக, பத்திரிகைகள் குறிப்பிடுவது போல திமுக-வில் காங்கயம் தொகுதியில் போட்டியிட எந்தவித சிக்கலும் இல்லை, தொகுதி நிர்வாகிகள், உடன்பிறப்புகள் மற்றும் மக்களிடையே எந்த பிரிவினையும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து அடிமை அதிமுக ஆட்சியை அகற்றுவதில் உறுதியோடு ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அந்த பத்திரிக்கை செய்தியை முற்றிலுமாக மறுக்கிறோம்.

மேலும், தலைவர் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்." இவ்வாறு அந்த மறுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...