கோவை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் உடனே விலை குறைப்பு செய்ய வலியுறுத்தி வரும் 22ம் தேதி திமுக சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ, மற்றும் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர். ராமச்சந்திரன் எக்ஸ்.எம் எல் ஏ ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 17.02.2021 அன்று, கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. அரசுகளைக் கண்டித்தும் - கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திமுக சார்பில் ,அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்தார்.
இந்நிலையில், கழகத் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்த்திய பா.ஜ.க, அதிமுக அரசுகளைக் கண்டித்தும் உடனே விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும், வரும் 22.02.2021 திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில், செஞ்சிலுவைச் சங்கம் அருகில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோவை மாநகர் கிழக்கு, கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் கிழக்கு, கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட, பொறுப்புக் குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகரக்கழக, பகுதிக்கழக, ஒன்றியக்கழக, வட்டக்கழக, பேரூர்க்கழக பொறுப்பாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், அனைத்து கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும், பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.