கோவை: கோவை சூலூர் பகுதியில் வேன் மூலமாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை சூலூர் பகுதியில் நேற்று மாலை கேரளாவிற்கு வேன் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சூலூர் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அருள்பிரகாஷ் அடங்கிய போலீசார் கோவை பாலக்காடு ரோட்டில் ஆக்ரோ கம்பெனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொலிரோ பிக்கப் மற்றும் அசோக் லைலாண்ட் வாகனங்கள் வந்தன. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 56 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. ஒரு முட்டையிலும் 50 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மொத்த எடை 2300 கிலோவாகும்.
இதனையடுத்து, வேனை ஓட்டி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் பிடித்தனர். மற்றொரு டிரைவர் தங்கராஜ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். கார்த்திக்கிடம் விசாரணை செய்தபோது கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு சென்றதாக கூறினார்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ரேஷன் அரிசி மூட்டைகளையும் குற்றவாளியையும் ஒப்படைத்தனர்.