உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: அதிமுக ஆட்சியில், கஷ்டமும், கண்ணீரும் தான் மகளிரின் நிலை - பொள்ளாச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

மகளிரை மதிக்கிறோம் என்று சொல்லும் அதிமுக ஆட்சியில், கஷ்டமும், கண்ணீரும் தான் மகளிருக்கு வந்து கொண்டிருப்பதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் பேசினார்.



மகளிரை மதிக்கிறோம் என்று சொல்லும் அதிமுக ஆட்சியில், கஷ்டமும், கண்ணீரும் தான் மகளிருக்கு வந்து கொண்டிருப்பதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் பேசினார்.

பொள்ளாச்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் கூட்டம் இன்று திமுக சார்பில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி வந்தவுடன் 100 நாட்களில் மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மனுக்களை பெற்றுக்கொண்டார்,

மேலும், கூட்டத்தில் ஸ்டாலினிடம் மக்கள் அவர்கள் தொகுதியில் சந்தித்து வரும் குறைகளை சுட்டிக்காட்டினர்.



இதைத் தொடர்ந்து பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அதிமுக ஆட்சியில் அவதூறுகளும் பொய்களைப் பரப்பி மக்களை திசைதிருப்ப நினைக்கிறார்கள். தற்போது, தமிழக மக்கள் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் இருப்பதால், கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டதால் இந்த கோபம் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை தூக்கி எறியும்.

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்



திமுக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கும், மகளிருக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். ஏழை எளிய விவசாயிகள், பெண்கள் ஆகியோர் கூட்டுறவு வங்கியில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்னும் மூன்று மாதத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் சீரமைக்கப்படும், என்று தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து பேசுகையில், அதிமுக பிரமுகருக்கு சம்பந்தம் இருப்பதாக தான் தெரிவித்திருப்பது தற்போது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது என்றும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக கட்சியினருக்கு சம்பந்தம் இருப்பது ஆதாரத்துடன் பேசுவதால் தன்மீது ஆண்மை இருந்தால் அதிமுகவினர் வழக்கு தொடரலாம். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் சட்டத்திலிருந்தும், மு.க.ஸ்டாலினிடம் இருந்தும் தப்ப முடியாது, என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...