திருப்பூர்: திருப்பூரில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பலூன்களை விண்ணில் பறக்க விட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பலூன்களில் கேஸ் சிலிண்டர் உருவப்படத்தை கட்டி அதை வானில் பறக்கவிட்டு நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.