கோவை: சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர் தொகுதிகளில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று அவற்றை தொடங்கி வைத்தார்.

கோவை வடக்கு சிங்காநல்லூர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இலவச பட்டா மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள நிறைவடைந்த பணிகளை பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணபதி சி.எம்.மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண்.41, 44, 46 மற்றும் 47 ஆகிய பகுதிகளில் சிறப்பு சாலை திட்டத்தின்கீழ் ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை, சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம், சாய் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.60 மற்றும் 61-க்குட்பட்ட விவேகானந்தா நகர், லட்சுமணன் நகர், அன்னை இந்திரா நகா், தாகூர் நகர், கிருஷணம்ம நாயுடு வீதி, டெக்ஸ்டூல் லே அவுட் மற்றும் சிந்து நகா ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 99 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சாலைகளுக்கு மறுதார்தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், சிவாலயா மண்டபம் அருகிலும், குனியமுத்தூர், ரைஸ்மில் ரோடூ ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.76, 77, 78, 79 மற்றும் 86 ஆகிய பகுதிகளில் ரூ.12 கோடியே 61 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டிலும், வார்டு எண்.87, 88, 89, 90, 91, 92, 93 ஆகிய பகுதிகளில் ரூ.32 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டிலான வளாச்சிப் பணிகளுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து, தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 100-வது வார்டு அண்ணாபுரம், மூரண்டம்மன் கோவில் வளாகம் அருகே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா மற்றும் அம்மா பூங்காவினை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்ததுடன் பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரம் சிக்னல் ஜங்ஷன் முதல் ஈச்சனாரி கோயில் பாலம் வரை ரூ.89.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினாகள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், மண்டல உதவி ஆணையாளர்கள் தி.ரா.ரவி (தெற்கு), எம்.முருகன் (கிழக்கு), செந்தில்குமார் ரத்தினம் (வடக்கு), உதவிப் பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.