கோவை: பொள்ளாச்சி பகுதியில் துணைப் பதிவாளர் மற்றும் உதவியாளரும் லஞ்சம் பெற முயன்ற போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். ரூ.1.25 லட்சம் லஞ்சம் பெற முயன்ற மாவட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ், 45, மற்றும் அவரது உதவியாளர் ஆறுமுகம், 45 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சம்பந்தபட்ட பயனாளர்களின் பட்டியல் தவறாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்ய, ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்டதையடுத்து, தளவாய் பாளையம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது.
டி.எஸ்.பி., கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், விஜயலட்சுமி, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரசாயனம் தடவிய ரூபாயை, புகர்தாரரிடம் கொடுத்து அனுப்பினர். அதை பெற முயன்ற துணைப் பதிவாளர் மற்றும் உதவியாளரை, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.