கோவை: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த சில நாட்களாக "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார். வரும் தேர்தலில் திமுக ஆட்சி அமைத்த 100 நாட்களில் உங்களுடைய மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என கூறி மக்களை சந்தித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் கட்சியினரிடம் பேசிய ஸ்டாலின், கோவையில் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இது, அதிமுக கோட்டை என சிலர் சொல்லி வருகின்றனர். அதை திமுக பாராளுமன்ற தேர்தலில் வென்று ஓட்டை ஆகிவிட்டது, என்று விமர்சித்தார்.
"ஒன் மேன் ஆர்மி"
மேலும், தொடர்ந்து 5 வருடங்களாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மக்களுடைய குறைகளை தினந்தோறும் கேட்டறிந்து வாரத்திற்கு 3 போராட்டங்களை அறிவித்து, தொடர்ந்து மக்களுக்காக "ஒன் மேன் ஆர்மி" யாக திமுக கட்சிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ கார்த்திக் தொடர்ந்து செயல்படுகிறார். அவருடைய செயல்பாடுகள் எப்பொழுதுமே வீண் போகாது. அவர் ஒன்றிய பதவியிலிருந்து எம்.எல்.ஏ.வாக இப்பொழுது மாவட்ட கழக பொறுப்புக்கு வந்துள்ளார், என்று புகழாரம் சூட்டினார்.
"அவருடைய சிறப்பான பணியை, உழைப்பை நான் தொடர்ந்து பாராட்டுகிறேன்", இவ்வாறு மு. க ஸ்டாலின் கார்த்திக் எம்எல்ஏ குறித்து பாராட்டிப் பேசினார்.