கோவையில் முதியவருடன் செல்பி எடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறியும் மு.க.ஸ்டாலின்!

கோவையில் குழந்தையிடம் முத்தம் பெற்று, முதியவருடன் செல்பி எடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறிந்து வருகிறார்.



கோவை: கோவையில் குழந்தையிடம் முத்தம் பெற்று, முதியவருடன் செல்பி எடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

கோவை பீளமேடு கொடிசியா அருகில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கிற்கு வந்த ஸ்டாலின் சுற்றியிருந்த கட்சியினரை சந்தித்து கைகுலுக்கி அவர்கள் ஆரவாரத்தில் அவருடைய வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்த பகுதிக்குள் மேடையிலிருந்து அரங்கத்துக்குள் வந்த ஸ்டாலின் நேரடியாக மக்களை சந்தித்தார்.

அப்போது, மகளிர் மற்றும் முதியவர்கள், குழந்தைகள் என அநேகர் காத்துக்கொண்டிருந்தனர். ஸ்டாலினை பார்த்ததும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். உடனடியாக அனைத்து மக்களிடமும் சென்று அனைவரிடமும் கைகுலுக்கி அவர்கள் கொடுத்த மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது ஒரு முதியவர் செல்பி எடுக்க ஆசைப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய செல்போனை பெற்று ஸ்டாலின் செல்பி எடுத்து அவருடைய ஆசையை நிறைவேற்றினார்.



அதைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் புகைப்படம் எடுக்க ஆசைப்பட அவர்களோடு இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார். ஒரு தாயிடமிருந்து குழந்தையைப் பெற்று முத்தமிட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து மக்களுடைய மனுக்களைப் பெற்று வருகிறார். ஆர்வத்தின் மிகுதியால் ஒருசில மூதாட்டிகள் கன்னத்தை பிடித்தும் கட்டித் தழுவியும் அவர் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...