கோவை: மத்திய அரசின் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி மார்க்சிய லெனினிஸ்டு மற்றும் அனைத்திந்திய புரட்சிகர விவசாயிகள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்துக்களின் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்டு பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக சட்டம் இயற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் மார்க்சிய லெனினிஸ்டு ரெட் ஸ்டார் மற்றும் அனைத்திந்திய புரட்சிகர விவசாயிகள் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மேலும் 70 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்மீது அரசு வன்முறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படும் மத்திய அரசின் போக்கு கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தனர்.
பின்னர், புதிய விவசாய திட்டங்களின் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டும், புதுடெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்த 160-க்கும் மேற்பட்ட விவசாயிகளை நினைவு கூறும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர். மதவாத சக்திகளை தோற்கடிக்க முற்போக்கு மற்றும் அனைத்து உழைக்கும் வர்க்க தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடுவோம் என்றும் கூறினர்.