உங்கள் தொகுதியில் ஸ்டாலின்: கோவை மக்களின் குறைகளை கேட்க வந்துள்ள தி.மு.க தலைவருக்கு உற்சாக வரவேற்பு..!

கோவை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை பீளமேடு கொடிசியா மைதானம் மற்றும் காரமடை ஆகிய பகுதிகளில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.



அவருக்கு பீளமேடு விமான நிலையத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., பையா கிருஷ்ணன், சேனாதிபதி, தென்றல் செல்வராஜ், சி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மலர்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், பொங்கலூர் பழனிச்சாமி, இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஆகியோரும் பங்கேற்றனர்.

இன்னும் சற்று நேரத்தில் கொடிசியா அருகே உள்ள பீளமேடு மைதானத்தில் உங்கள் தொகுதியில் மு.க. ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. அதற்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் மற்றும் பொதுமக்களும் திரளாக கூடி உள்ளனர்.

கோவையில் பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை 8 முதல் 10 மணி வரை சாலை மேம்பாலங்கள் வேலை நடைபெறுவதால் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சற்று கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் மேடைக்கு மு.க ஸ்டாலின் வர இருக்கிறார்.

மக்களிடையே மனுக்களை பெற்று அதற்கான விளக்கமும் அளித்து மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதற்கான, ஏற்பாடுகளை திமுக மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...