கோவை: தென்னை நகரமான பொள்ளாச்சி தனி மாவட்டமாகும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மக்கள் கோரிக்கைகளுக்கு இணங்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று அவர் கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் நேற்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது அங்கிருந்த மக்கள் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் வேலுமணி, இதை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று உடனடியாக பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து கூட்டத்திலிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கோஷங்களை எழுப்பி நன்றி தெரிவித்தனர்.
இதேபோல் பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், 'பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு வேளாண் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை' என்றார்.
அவரைத்தொடர்ந்து அமைச்சர் வேலுமணி பேசும்போது, 'விவசாயிகளுக்காக மும்முனை மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார். விவசாயிகள், பொதுமக்களுக்காக, 'தென்னை நகரம்' என அழைக்கப்படும் பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம்' என்றார்.