கோவை: கோவையில், விழிப்புணர்வு நாடகத்துடன் 32-வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு பெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டம் சார்பில் கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. சாலை பாதுகாப்பு மாத விழாவின் நிறைவு விழா கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரஹாம் தலைமை தாங்கினார். கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில், எரிபொருள் சிக்கனம் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், பயணிகளிடம் கனிவாகப் பேசும் நடத்துநர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பு பிரசார வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.