7.69 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த பொள்ளாச்சி தொழிலதிபர் கைது!

கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.7.69 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் குமார் படேல் என்பவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.7.69 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் குமார் படேல் என்பவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரமேஷ் குமார் படேல் என்பவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மரக்கட்டைகள் விற்பனை நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மொத்தம் 5 நிறுவனங்களை நடத்திவரும் இவர் போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக போலி கணக்கு காட்டியிருக்கிறார். இதற்கு அரசு அளிக்கும் வரிச்சலுகை (input credit) பெற்றிருக்கிறார். அந்தவகையில் ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்ததன்மூலம் அரசுக்கு ரூ.7.69 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்மீது செய்யப்பட்ட புகாரின்பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து ரூ.7.69 கோடி வரி ஏய்ப்பு செய்த அந்த தொழிலதிபரிடமிருந்து 1.16 கோடி ரூபாய் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.2 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ள நிலையில், ரூ.5 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது பிணையில் வர முடியாத குற்றமாகும்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...