கோவை: கோவை அருகே வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் எலெக்ட்ரிசியன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தீனம் பாளையத்தில் உள்ளது ஜிம்சன் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (29), இவருக்கு கோகிலா 24 என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் வீடு கட்ட கடன் வாங்கினார். அவரால் கடனை சரியாக திருப்பி செலுத்த முடியவில்லை. தொடர்ந்து கடனை திருப்பி செலுத்தக் கூறி வங்கி அதிகாரிகள் அவரை தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே, தற்கொலைக்கு முன் அவர் போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். வங்கி கடனை திருப்பி செலுத்தக் கூறிய அதிகாரிகள், எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்தன. அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் எனது சாவுக்கு வங்கி அதிகாரிகள் நெருக்கடி காரணம். நான் இறந்த பின்னர் வங்கியில் உள்ள வீட்டு பத்திரங்களைப் பெற்று எனது தாயிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக்கு தங்களை மட்டுமே நம்பி விடைபெறுகிறேன் என எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.