கோவை: ராமர் கோயில் கட்டுவதற்கான எதிர்பார்ப்பும் ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவும் மக்கள் சிறப்பான வரவேற்பை ஏற்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
கோவை: ராமர் கோயில் கட்டுவதற்கான எதிர்பார்ப்பும் ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது எனவும் மக்கள் சிறப்பான வரவேற்பை ஏற்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
கோவையில் மேகாலயா முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன் எழுதி, விஜயா பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை’ என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
ஆா்.எஸ்.எஸ் தலைவா் மோகன் பாகவத் நூலை வெளியிட, முதல் பிரதியை ஆா்.வி.எஸ். கல்வி அறக்கட்டளைத் தலைவா் கே.வி.குப்புசாமி பெற்று கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியில் மோகன் பாகவத் மேலும் பேசியதாவது:
நினைவுகூா்தல் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று. பழையனவற்றை நினைவுகூரும் போதுதான் நிகழ்காலத்தில் அந்தத் தவறை செய்யாமல் நம்மை நாமே திருத்திக் கொள்ள முடியும். நம் நாட்டில் தோன்றிய சிந்தனைகள், வேதங்கள் அனைத்தும் உலகத்துக்குப் பொதுவானவை. அவற்றைக் குறிப்பிட்ட மதத்தினர்தான் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. இதன் காரணமாகத்தான் உலகத்துக்கே முன்னோடி கலாச்சாரமாக நமது கலாச்சாரம் திகழ்கிறது என்றார்.
நாம் யாா், நமது பாரம்பரியம், பெருமைகள் என்ன என்பதை உணர்ந்தால் மட்டுமே நம்மைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் நம்மைச் சார்ந்தவர்களையும், உலகையும் காப்பாற்ற முடியும். இந்தப் புத்தகமானது பார்வையற்றவர்களுக்கான கைத்தடி போன்றது. இதைப் படிப்பதன் மூலம் நாம் இருளில் இருந்து வெளியே வந்து உலகைப் பாா்க்க முடியும்.
அனைவரும் ஒன்று என்பதை உணர்த்துவதே இந்திய கலாச்சாரம். வேதங்களையும், புராணங்களையும் படிக்கும்போது நமது அறிவுக்கண் திறக்கப்படும். உலகை, உலகில் உள்ள அனைவரையும் சமமாகப் பாா்க்கும் ஞானம் வெளிப்படும். அனைவரும் சமம் என்கிற ஞானத்தை நமக்கு கொடுத்தது வேதங்களும், புராணங்களும், அதன் வழி வந்த இலக்கியங்களும். ஞானத்தை நோக்கி தேடிச் செல்லும் பயணத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
ஏற்புரையில் மேகாலயா முன்னாள் ஆளுநரும், நூலின் ஆசிரியருமான வி.சண்முகநாதன் பேசியதாவது:
உலகில் கிரேக்கம், சீனம் என பல தத்துவங்கள் உள்ளன. ஆனால், இந்திய தத்துவம், கலாச்சாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கடவுள் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார் என்பதை நமது கலாச்சாரம் வலியுறுத்துகிறது. இந்த மனநிலையை வளர்த்துக்கொள்ள வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களின் வழிகாட்டுதல் நமக்குத் தேவை என்றாா்.