கோவை: வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். 960 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பேசும் அவருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் 25-ந்தேதி பிரதமர் மோடி கோவை வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அன்று காலை புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை ஏற்றுக் கொள்ளும் மோடி கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு வருகிறார். அங்கு அவர் கீழ்பவானி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார். இதன் மதிப்பு 960 கோடி ஆகும். அதன்பிறகு அன்று இரவு தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகர் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி வருகையையொட்டி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என மாநகர போலீசார் தெரிவித்தனர்.
மாநகருக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. தனியார் நட்சத்திர விடுதிகளில் தங்கும் வெளிமாநிலத்தவர்கள் முழு சோதனைக்குப் பிறகு அடையாள அட்டை வாங்கிய பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் நபர்கள் மற்றும் முன்னாள் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன் மாநிலம் முழுவதும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.