கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் ரயிலை இயக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கி வந்த பயணிகள் ரயில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் அனைத்து ரயில் போக்குவரத்துகளும் இயங்க துவங்கியுள்ள நிலையில், பயணிகள் ரயில்களை மட்டும் இயக்காமல் வைத்துள்ளது மோடி அரசு.

பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த இந்த பயணிகள் ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு தான் பெரும் சுமையாக அமைந்துள்ளது.



எனவே, மத்திய மோடி அரசு மக்கள் விரோத போக்கை கைவிட்டு, கோவை -மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வலியுறுத்தி கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் காரமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தோழர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...