குடும்ப வன்முறைகளை தடுக்க 'வலிமையான குடும்பம் வலுவான சமூகம்' பரப்புரை வரும் 19ம் தேதி முதல் துவங்குகிறது - ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அறிவிப்பு

கோவை: கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமான அளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன, என்று கோவையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவி கதீஜா காஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கோவை: கடந்த 10 ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை விட இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிகமான அளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியுள்ளன, என்று கோவையில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவி கதீஜா காஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



இது குறித்து அவர் பேசுகையில், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. குடும்ப உறவுகள் மற்றும் குடும்ப கட்டமைப்பை பற்றிய சரியான அறிவையும், புரிதலையும் ஏற்படுத்துவதன் மூலமும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கடமை மற்றும் உரிமைகளை உணர வைப்பதன் மூலமும், இறை உணர்வை போதிப்பதன் வழியாகவும், சமூகத்தில் நேர்மறையான சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் உருவாக்க முடியும். இதன் மூலம் வலிமையான ஆக்கப்பூர்வமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும், என்றார்.

"வலிமையான குடும்பம் வலுவான சமூகம்"

இதை உணர்த்தும் வகையில், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் வரும் 19 முதல் 28ம் தேதி வரை "வலிமையான குடும்பம் வலுவான சமூகம்" என்ற மையகருத்தில் தேசிய அளவில் பரப்புரை இயக்கம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு அரங்க கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு இச்செய்தி சென்றடைய முடிவு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது கோவை மாநகரம் மகளிரணி தலைவி ஜஹீனா அஹமத், நிர்வாகிகள் பர்ஜானா, சலீனா பஹி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...