கோவை: வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் நேற்று மட்டும் 350 பேர் விடுப்பு எடுத்துச் சென்றதால் வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாமல் காத்தாடியது. அத்தியாவசியப் பணிகள் ஸ்தம்பித்தன.
கோவை: வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய்த்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் நேற்று மட்டும் 350 பேர்விடுப்பு எடுத்துச் சென்றதால் வருவாய்த்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாமல் காத்தாடியது. அத்தியாவசியப் பணிகள் ஸ்தம்பித்தன.
தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டங்களில் களமிறங்கியுள்ளன. அரசு ஊழியர் சங்கம், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கருவூலத்துறையைத் தொடர்ந்து வருவாய்த்துறையும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டு துவங்கியுள்ளது. கோவை மையம் சார்பில் இந்தப் போராட்டதில் 350 பேர் பங்கேற்றுள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்குதல், புதிய ஊழியர்களுக்கு பயிற்சி, காலியிடங்களை நிரப்புதல், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோவை கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் வருவாய்த்துறைகளின் கீழ் பணிபுரியும் 70 பேர் நேற்று விடுமுறை எடுத்து பணியைப் புறக்கணித்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
தேர்தல், கொரோனா தடுப்புப் பணி மற்றும் பல்வேறு நலத்திட்ட விநியோகம் செய்யும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஊழியர்களின் இப்போராட்டம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சண்முகராஜ் கூறுகையில், 'இதுவரை மூன்று கட்டப் போராட்டங்கள் முடிந்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், நான்காம் கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்' என்றார்.