கோவை: கோவை அருகே வாலிபர் ஒருவர் அரைநிர்வாணமாக மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 25). இவர் ஒண்டிப்புதுாரிலுள்ள சூர்யா நகரில் நண்பர்களுடன் சேர்ந்து அறைஎடுத்து தங்கி கட்டட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற அவர், வெகுநேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்றுகாலை அப்பகுதியிலுள்ள வேப்பமரத்தில் துாக்கில் சடலமாக தொங்கினார். சட்டை அணிந்திருந்தார். ஆனால் இடுப்புக்கு கீழே ஆடையின்றி நிர்வாணமாகக் காணப்பட்டார். சிங்காநல்லுார் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி அவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு துாக்கில் தொங்கவிடப்பட்டாரா என்பதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.