கோவை: கோடை வெப்பம் தொடங்கி உள்ளதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகும். கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது, கோடை காலம் துவங்கி, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
கடந்த, பத்து நாட்களாக மதிய வேளையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கேரளா மற்றும் கோவை குற்றாலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவும் இல்லை. இதனால் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து சரியத் துவங்கியுள்ளது.வரும் நாட்களில் மழைப்பொழிவு இல்லையென்றால், நீர்வரத்து மேலும் குறையும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.