கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைக் கண்டித்து நாளை கலெக்டர் அலுவலகம் முன் இந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கோவை: கோவைமாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையைக் கண்டித்து நாளை கலெக்டர் அலுவலகம் முன் இந்துமுன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கோவை வடக்கு காளபட்டி மற்றும் சரவணம்பட்டி ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஜெய்கார்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதைக் கண்டித்து நாளை மாலை 4 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கோவை வடக்கு தடாகம் மற்றும் கவுண்டம்பாளையம் நகர்ஒன்றிய செயற்குழுக் கூட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் நாளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்துமுன்னணி சார்பில் திரளாக கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
கோவை வடக்குப் பகுதியைச் சேர்ந்த 10 ஒன்றியங்களில் ஒரே நேரத்தில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.