திருச்சி ஜல்லிக்கட்டு போராட்டத்தை சிறப்பாக கையாண்ட 'டி.சி.மயில்வாகனன்' கோவை துணை ஆணையராக நியமனம்

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார்.



சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார்.

அதன்படி, கோவை மேற்கு மண்டல ஐ.ஜியாக தினகரன் ஐபிஎஸ் மற்றும் கோவை துணை ஆணையராக மயில்வாகனன் பொறுப்பேற்க உள்ளனர். டி.சி.மயில்வாகனன் கோவை துணை ஆணையராக நியமனம்.

கோவை தலைமையிட துணை ஆணையர் குணசேகரன் சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் கோவை தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள அ. மயில்வாகனன், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது திருச்சி மாவட்ட துணை ஆணையராக இருந்தார். அப்போது, திருச்சி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் கையாண்ட விதம், மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையே அவருக்கு நற்பெயற்றை பெற்று தந்தது.



அதற்கு சான்றாக, அதே ஆண்டு சுதந்திர தின விழாவில், தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு, சீரிய பணியாற்றியதற்காக சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் மயில்வாகனனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...