கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா மாற்றம்; புதிய ஐ.ஜியாக தினகரன் ஐபிஎஸ் நியமனம்..!

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி போலீஸ் ஐ.ஜி பெரியய்யா உட்பட 54 போலீஸ் அதிகாரிகள் மாற்றம். புதிய ஐ.ஜியாக தினகரன் ஐபிஎஸ் நியமனம்.



கோவை: வருகிற சட்டமன்ற தேர்தலை ஒட்டி 54 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நேற்று மொத்தம் 54 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதில், கோவை மேற்கு மண்டல ஐ.ஜியாக தினகரன் ஐபிஎஸ் மற்றும் கோவை துணை ஆணையராக மயில்வாகனன் பொறுப்பேற்க உள்ளனர். 

இது தொடர்பாக நேற்று இரவு அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது - ஆர். தினகரன், சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த இவர், மேற்கு மண்டல ஐ.ஜியாக மாற்றப்பட்டார். கே. பெரியய்யா மேற்கு மண்டல ஐ.ஜி பணியில் இருந்த இவர், சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை

குணசேகரன், கோவை நகர தலைமையக துணை கமிஷனராக இருந்த இவர் அமலாக்கப்பிரிவு சேலம் மண்டல சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.மேலும்,கோவை துணை ஆணையராக அ. மயில்வாகனன், நியமிக்கப்பட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டம். 

பாண்டியராஜன் சென்னை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றி இவர் நீலகிரி மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். சசிமோகன் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி இவர் சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிற நியமனங்கள்

கணேசமூர்த்தி பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றிய இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். தீபக் தாமோதர் நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த இவர் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி யாகநியமிக்கப்பட்டுள்ளார். கே. சங்கர் சி.பி.சி.ஐ.டி இவர் வடக்கு மண்டல ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அருண் சென்னை மண்டல சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய இவர் நிர்வாகப் பிரிவு ஐ.ஜியாக மாற்றப்பட்டார். வி பாலகிருஷ்ணன் சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு பிரிவு இணை கமிஷனர் ஆன இவர் சென்னை கிழக்கு சட்ட ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...