கொரோனா பாதுகாப்பு வழிமுறை பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும்: கோவை கலெக்டர் அறிவிப்பு!

கோவை: கொரோனா பாதுகாப்பு வழிமுறை பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


கோவை: கொரோனா பாதுகாப்பு வழிமுறை பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும் என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 55,200 பேர் ஆவர். அதில் 679 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளால் தற்போது ஒரு நாளைக்கு 50 பேர் பாதிப்பு என்ற நிலைக்கு குறைந்துள்ளது. ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கக்கூடாது என தமிழக அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.



இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக 50-க்கும் குறையாமல் ஒவ்வொரு நாளும் பாதிப்பு ஏற்படுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. அப்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் கொரோனா குறித்த அச்சத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிய வருகிறது. முகக்கவசம் அணியாமல் பெருமளவில் வெளியில் வந்து செல்வது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருப்பது போன்ற நிலை அதிக அளவில் உள்ளது. திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், துணி மற்றும் நகைக்கடைகள் போன்ற இடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதுடன் முகக்கவசம் இல்லாத நிலையைப் பார்க்க முடிகிறது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும்மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் பரவலாக உள்ளதால், அங்கிருந்து கோயம்புத்தூர் வருபவர்கள் மூலமாகவும், பாதிப்பு அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.

இவற்றை கருத்தில்கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், தவறாமல் முகக் கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் முகக்கவசம் 100 சதவீதம் அணிவதை உறுதி செய்திட போர்டு வைக்காமல் முகக்கவசம் அணியாத நிலையில் யாரும் இருந்தால் மண்டப உரிமையாளர்கள் மற்றும் திருமணம் நடந்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிவுரைகள் எதையும் பின்பற்றாத மண்டபங்கள் மற்றும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள தொடர் தளர்வுகள் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட இடங்களில் முகக் கவசம், உரிய சமூக விலகல் நடைமுறைகள் தவறாது கடைபிடிக்க வேண்டும். திரையரங்குகள், உணவக விடுதிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், ஹேண்ட் சானிடைசர் வழங்குவதற்கு போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...