கோவையில், போலீஸ் என அறிமுகம் செய்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: 2 வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவை: கோவையில், போலீஸ் என அறிமுகம் செய்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றது தொடர்பாக 2 வாலிபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது.


கோவை: கோவையில், போலீஸ் என அறிமுகம் செய்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றது தொடர்பாக 2 வாலிபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது.

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60), நேற்று மாலை இவர் காஞ்சிபுரம் ராஜாஜி ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சரஸ்வதியின் அருகில் வந்து தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் சரஸ்வதியிடம் இந்தப் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. எனவே வயதான காலத்தில் நகைகளைப் போட்டு செல்ல வேண்டாம் என அறிவுரை கூறினர். இதை உண்மையென நம்பிய சரஸ்வதி தன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயின் மற்றும் 2 பவுன் என மொத்தம் 5 பவுன் நகைகளை கழற்றி போலீஸ் என கூறிய நபரிடம் கொடுத்தார். அவர்கள் அதனை பெற்று ஒரு பேப்பரில் மடித்து சரஸ்வதியிடம் கொடுத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுமாறு கொடுத்தனர்.

சிறிது நேரம் கழித்து மூதாட்டி பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் சிறிய கற்கள் மட்டுமே இருந்தன. போலீஸ் என கூறிய வாலிபர்கள் 5 பவுன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...