கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்து உள்பட 3 அ.தி.மு.க. பிரமுகர்களின் காவலை வரும் 3-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்,
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்து உள்பட 3 அ.தி.மு.க. பிரமுகர்களின் காவலை வரும் 3-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மகளிர் சங்கங்கள், எதிர்க் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் தொடர்ந்து உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு குற்றவாளிகூட தப்பிவிடக்கூடாது என்றுகூறி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக சி.பி.ஐ. நடத்திய தொடர் விசாரணையில் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர்கள் ஹாரன் பால், பைக் பாபு, அருளானந்து உளபட 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்து. அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 3 பேருக்கும் இன்று நீதிமன்ற காவல் முடிவடைந்ததையொட்டி வீடியோ கான்பரன்சிங் மூலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வழக்கை விசாரணை செய்து வரும் (மார்ச்) 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.