கோவையில் வரும் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு!

கோவை: வரும் 21-ம் தேதி கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது.பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


கோவை: வரும் 21-ம் தேதி கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது.பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தமிழர்களின் பழைமையான வீர விளையாட்டாகவும், தமிழ்நாட்டின் கலாசாரத்தின் அடையாளமாகவும் இருப்பது ஜல்லிக்கட்டு. அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் 21-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள், பொதுப்பணித்துறையின் சார்பில் பார்வையாளர் மாடம் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்கும் இடத்திற்கிடையே போதுமான இடைவெளி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். பார்வையாளர்கள் அமரும் இடம் பாதுகாப்பாக இருக்க கட்டை வேலி அமைக்க வேண்டும்.



விழாவினைக் காண வசதியாக மரத்தினாலான பாடங்கள் (Spectator Gallery) விழாக் குழுவினரால் அமைக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டிருக்கும் இரட்டைத் தடுப்பு வேலிகள் உறுதியுடனும் குறைந்தது 8 அடி உயரத்தில் காளைகள் ஏதும் துள்ளிக் குதித்து பார்வையாளர்கள் பகுதிக்குள் சென்றால் அதை தடுக்கும்விதத்தில் நெருக்கமாக அமைக்க வேண்டும்.

காவல்துறையின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துமிடத்தில் வருகை புரியும் பார்வையாளர்கள், காளைகள், வீரர்கள் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு போதுமான காவலர்களை பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்து மேற்படி பணியை மேற்கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி, பார்வையாளர் மாடம், ஓடி முடித்த காளைகள் சேகரம் செய்யப்படும் பகுதி மற்றும் காளைகள் வெளியேறும் பகுதி ஆகியவற்றில் தகுந்த அளவில் காவலர்களை நியமனம் செய்து ஜல்லிக்கட்டு விழா முடியும் வரை பணிபுரிந்து கண்காணிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்குமிடம் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றில் தகுந்த காவலர்களை நியமனம் செய்யவேண்டும். போட்டியில் பங்கேற்கும் நபர்கள் காயமடைந்தால் உடனுக்குடன் அவர்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். தேவையான அளவு உயிர் காக்கும் மருந்துகளுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்து தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவத் துறையின் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்யவும், காயடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித்தனியே மருத்துவக் குழுக்களை நியமனம் செய்ய வேண்டும். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...