கோவை: 50 ஆண்டுகளில் செய்யாத சாதனையை ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. செய்துள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 1000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவில்பாளையம் பகுதியில், 1500 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முடிவுற்ற திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, `மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது தலையில் விக்கு வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் கிடைத்துள்ளது' என்றார்.