திருப்பூர்: தெருவிளக்குகள் அமைக்கக்கோரி திருப்பூரில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வண்ணம் உடனடியாக தெரு விளக்குகளை அமைக்கக் கோரியும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த பொதுமக்களை அலைக்கழிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது, பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பனிடவும், உயர்த்தப்பட்ட கேஸ் விலை மற்றும் பெட்ரோல் விலையைக் குறைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.