கோவை: பெட்ரோல் டீசல், காஸ் விலையேற்றம் தற்காலிகமானது தான் எனவும் இதனால் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவித பாதிப்பும் இருக்காது, என்று பா.ஜ. மாநில தலைவர் எல். முருகன் கோவையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கோவையில் பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைக்க வருகிறார். இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகள் கோவை அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று காலை, பா.ஜ. தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன்ரெட்டி மற்றும் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை இணையமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பா.ஜ. மாநில தலைவர் எல். முருகன், மகளிரணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் சேகர், மாநில துணை தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜ. மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது: வரும் 21ம் தேதி ராஜ்நாத் சிங் சேலத்தில் பிரசாரத்தை துவங்க உள்ளார். தொடர்ந்து, தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். தேர்தல் சம்மந்தமான ஆலோசனை கூட்டம் 2 நாட்கள் சென்னையில், கோவையிலும் நடைபெற உள்ளது.
சமீபத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையேற்றம் குறித்து பதிலளித்த அவர், இந்த விலையேற்றம் தற்காலிகமானது என்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலையேற்றமே இதற்கு காரணம், என்றார். மேலும், இதனால் பாஜகவிற்கு தேர்தலில் எந்தவித பாதிப்பும் இருக்காது. இது நாளடைவில் குறைய வாய்ப்பு உண்டு. எரிவாயு விலை நிச்சயமாக குறையும். காஸ் மானியம் நிறுத்தப்படவில்லை. அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது, என்று விளக்கினார்.
தமிழக சட்டமன்றத்துக்கு அதிக எண்ணிக்கையில் பா.ஜ. உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள், என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.