கோவை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி தீவிரம்
கோவை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், மாவட்டம் தோறும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள துணை ஆட்சியர் மதிப்பிலான அதிகாரிகளுக்கு, ஆன்லைன் மூலம் தேர்தல் தொடர்பான பயிற்சிகள் நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்று முன்தினம் தொடங்கி, வரும்19-ம் தேதி வரை பயிற்சி நடைபெற்று வருகிறது.
அதேசமயம், மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்ட கண்காணிப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், அவர்களுக்கு வேட்பு மனுக்களை வாங்குதல், நடத்தை விதிமுறைகள், வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுதாக்கலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.