கோவை: புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கெனவே வழங்கிய அரசாணையை நடைமுறைப்படுத்தக்கோரி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் சமூக நீதி கட்சி மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மாநகரிலேயே குடியமர்த்த வேண்டும், அருந்ததியர் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும், புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சமூக நீதி கட்சியின் மகளிர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டம் குறித்து சமூக நீதிக் கட்சித் தலைவர் ந.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, கோவை பகுதியில் உள்ள இடங்கள் பெருவாரியாக தனியார் மற்றும் அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள 23,500 கோடி ரூபாய் நிதி முறையாக மக்களை வந்தடையவில்லை என்றும் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட 1,500 கோடி ரூபாய் என்ன ஆயிற்று என்று கேள்வி விடுத்தார்.

மேலும், கோவை மாநகரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 25 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து தூய்மைப் பணிக்காக வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களது நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாநகரிலேயே அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பட்டா வழங்க அரசாணை பிறப்பித்தார். ஆனால் இதுநாள் வரை அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.