கோவையில் `ஆபரேசன் ஸ்மைல்' திட்டம் மூலம் 31 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

கோவை: கோவையில் `ஆபரேசன் ஸ்மைல்' திட்டம் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர் என 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.


கோவை: கோவையில் `ஆபரேசன் ஸ்மைல்' திட்டம் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர் என 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

கோவையில், காணாமல் போன குழந்தைகள், பிச்சையெடுக்கும் சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும், 'ஆபரேஷன் ஸ்மைல்' திட்டம் கடந்த 1-ம் தேதி துவங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை, சைல்டு லைன், தொழிலாளர் நலத்துறை, போலீசார் இணைந்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்திய இந்த சோதனையின்போது 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர் சுந்தர் கூறும்போது, `ஹோட்டல், மெக்கானிக் ஷாப், கடைகளில் பணிபுரிந்தவர்கள், பேருந்து, ரயில்நிலையங்களில் பிச்சை எடுப்போர் என 14 முதல் 18 வயதுக்குள்ளான 31 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்டவர்கள், குழந்தைகள் நலக்குழு வாயிலாக அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெற்றோர் இல்லாத குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

இதுபோன்ற குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சாலையில் குழந்தைகளைவைத்து பிச்சை எடுப்பவர்களை பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவிக்கலாம். `ஆபரேசன் ஸ்மைல் திட்டம்' சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...