கோவை குளத்தில் கிடந்த உடலை மீட்க 11 மணிநேரம் தாமதித்த போலீசார்: பொதுமக்கள் கோபம்!

கோவை: கோவையில் குளத்தில் பிணமாகக் கிடந்தவரின் உடலை மீட்பதில் காவல்நிலைய எல்லை பிரச்சினை காரணமாக 11 மணிநேரம் தாமதமானது. போலீசாரின் இந்த மெத்தனத்தால் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் குளத்தில் பிணமாகக் கிடந்தவரின் உடலை மீட்பதில் காவல்நிலைய எல்லை பிரச்சினை காரணமாக 11 மணிநேரம் தாமதமானது. போலீசாரின் இந்த மெத்தனத்தால் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர்.

கோவை நாகராஜபுரம் பேரூர் ரோட்டில் உள்ள நரசாம்பதி குளத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று காலை 7 மணிக்கு வடவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தலையில் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது. சடலம் கிடந்த இடம் செல்வபுரம் - வடவள்ளி காவல்நிலைய எல்லைப் பகுதி என்பதால், வேடப்பட்டி வி.ஏ.ஓ. செந்தில்குமார் வரவழைக்கப்பட்டு அந்த இடம் பற்றி விசாரிக்கப்பட்டது.

வி.ஏ.ஓ. அந்த இடம் பற்றிய தகவல் திரட்டியதில் அது தெலுங்குபாளையம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்டது என தெரியவந்தது. அதன் அடிப்படையில் அது செல்வபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் வடவள்ளி போலீசார் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அங்கு வந்த செல்வபுரம் போலீசார் சடலம் கிடக்கும் இடம், அது எங்கள் எல்லைக்கு உட்பட்டதல்ல என்று கூறிச் சென்றனர்.

வடவள்ளி காவல்நிலையம் கோவை புறநகர்ப் பகுதியிலும், செல்வபுரம் காவல்நிலையம் கோவை மாநகரப் பகுதியிலும் உள்ளது. ஆக, எல்லைப் பிரச்னையால் 11 மணி நேரம் போலீசார் யாரும் சடலத்தை எடுக்கவில்லை. மாலை 6 மணி அளவில்தான் மாநகர போலீசார், புறநகர் போலீசார் என இரு தரப்பினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதன்பிறகு வடவள்ளி போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தை மாநகர துணை கமிஷனர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வடவள்ளி போலீசார் கூறுகையில், 'வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட இடத்தில், சடலம் கிடக்கவில்லை. இருப்பினும், மாலை நேரமானதால் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிந்துள்ளோம். வழக்கு செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்படும்' என்றார். ஆதலால் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். போலீஸ் நிலைய எல்லை பற்றி முடிவெடுக்க இவ்வளவு நேரமா என்று மக்கள் புலம்பினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...