தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியில் கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.
தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சியில் கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.
பொள்ளாச்சி அருகே உள்ளஅங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் காணாமல் போனதாக, அவரது தந்தை அர்ஜுனன் ஆழியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
விசாரணையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட சந்தோஷ், மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பதுங்கி உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த சந்தோஷ் மீது, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இது தொடர்பாக, கேரள மாநில மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் சந்தோஷ் தொடர்பான வழக்குகள் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள சந்தோஷின் வீட்டில் அவரது தந்தை அர்ஜுனன் மற்றும் அவரது தாய் கலைச்செல்வி ஆகியோரிடம் நேற்று நான்கு பேர் கொண்ட கேரளா மாவோயிஸ்ட் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தோசை போலீசிடம் சரணடைய சொல்லுமாறும், சரணடைந்தால், அவரின் வழக்குக்கு ஏற்படும் செலவுகளை அரசு ஏற்றுக்கொண்டு, அரசு சார்பில் உதவி தொகை வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சந்தோஷின் நண்பரிடமும் கேரள போலீசார் தொலைபேசி வாயிலாக விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.