பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் யானையின் கோரை பற்களை  விற்க முயன்ற 2 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் யானையின் கோரை பற்களை  விற்க முயன்ற 2 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை


 பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள துணிக்கடையில் பெண் யானையின் கோரை பற்களை திருடி வந்து விற்க முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசியதகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று துணிக்கடை அருகே மாறு வேடத்தில் நின்றுகொண்டிருந்த வனத்துறையினர் அந்த கடைக்கு சந்தேகத்திற்கிடமாக வந்தவரிடம் சோதனை நடத்தியதில் பெண் யானையின் கோரை பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, 

இதனைதொடர்ந்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில் சேத்துமடை அருகே உள்ள தம்பம்பதி மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் மணியன் என்பதும், இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் சென்ற போது இறந்து கிடந்த பெண் யானையின் மண்டை ஓட்டில் இருந்து யானையின் கோரை பற்களை எடுத்து வந்து வேட்டைக்காரன் புதூர் பகுதியில் உள்ள துணி கடை உரிமையாளர் மோகன்ராஜ் என்பவரிடம் விற்க முயன்றதும் தெரியவந்தது.



பின்னர், பற்களை திருடி வந்த மணியன் மற்றும் அதை வாங்க முயன்ற மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினர், வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி முதலாவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...