கோவையில் ராணுவத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி வாலிபரிடம் மோசடி: முன்னாள் ராணுவ வீரர் கைது!

கோவை: கோவையில் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

கோவை பேரூர் அருகே உள்ள மத்திபாளையத்தைச் சேர்ந்தவர் பாரத் பிரியதர்ஷன் (வயது 22). இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரரான கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரிடம் பிரியதர்ஷன் தன்னை எப்படியாவது ராணுவத்தில் சேர்த்து விடுங்கள் என்று கூறினார். அப்போது ரஞ்சித் தனக்கு ராணுவத்தில் ஏராளமான அதிகாரிகளைத் தெரியும் என்று கூறியதுடன் பணியில் சேர கொஞ்சம் பணம் செலவாகும் என ஆசைவார்த்தை கூறினார்.

இதை உண்மையென நம்பிய பாரத் பிரியதர்ஷன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட ரஞ்சித் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். தன்னை ரஞ்சித் ஏமாற்றியதை அறிந்த பாரத் பிரியதர்ஷன் இதுகுறித்து ஆலந்துரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...