10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது: மாணவி குளித்ததை வீடியோ எடுத்தவரும் கைதானார்: வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மீதும் போக்சோ பாய்ந்தது!

கோவை: 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதேபோல் மாணவி குளித்ததை வீடியோ எடுத்தவரும் கைதானார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது.


கோவை: 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதேபோல் மாணவி குளித்ததை வீடியோ எடுத்தவரும் கைதானார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது.

கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார்.

மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது கடந்த அக்டோபர் மாதம் தான் தனியாக வீட்டில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான மோகன் என்பவர் குடிபோதையில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதால் யாரிடமும் சொல்லவில்லை என்றாள்.

இதைக் கேட்டதும் பதறிப்போன பெற்றோர் சம்பவம் குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தநாயகி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மோகனை கைது செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 38). சாக்கு வியாபாரியான இவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளித்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தீவிர விசாரணை நடத்தி செல்போனில் வீடியோ எடுத்த ஜெயச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...