பொள்ளாச்சி: பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி: பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 170 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் இந்தப் பணி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிறைவடையாமல் உள்ளது. நகர்ப் பகுதியில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளதால் தினந்தோறும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதைக் கண்டித்தும், குப்பை வரி உள்ளிட்ட தேவையற்ற வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் பொள்ளாச்சி நகர தி.மு.க. பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் நடைபெற்றது.
முற்றுகையில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.